This Article is From Sep 25, 2019

Amazon, Flipkart Mega Festive Sales: அட்டகாச சலுகைகளின் விபரங்கள் இதோ...!

Amazon and Flipkart : இரண்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வழங்கும் சலுகையினால் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டமாக உள்ளனனர்.

Amazon, Flipkart  Mega Festive Sales: அட்டகாச சலுகைகளின் விபரங்கள் இதோ...!

அமேசானின் "Great Indian Festival" ப்ளிப்கார்டின் "The Big Billion Days" செப்.29 முதல் அக்.4 வரை நடைபெறும்.

New Delhi:

ஆன்லைன் வணிகத்தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் செப்படம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை மெகா பண்டிகை சீசன் விற்பனைகளை அறிவித்துள்ளது. 

இரண்டு ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்களும் பெரிய அளவில் தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான விலைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சித்து வருகின்றன. 

அமேசானின் “கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்” பண்டிகை சலுகையாக கேஷ்பேக், கூப்பன்கள் கவர்ச்சிகரமான ஈஎம்ஐ ஆஃபர்களை வழங்குகிறது. ஃபிளிப்கார்டின் “தி பிக் பில்லியன் டேஸ்” இலவசமான டெலிவரி, ‘பே லேட்டர்' திட்டங்களின் கீழ் வாங்க முடியும். புதிய வெளியீடுகளின் வரையறுக்கப்பட்ட பதிப்பு மற்றும் 90 சதவீதம் வரை வழங்கப்படுகின்றன.   

இரண்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வழங்கும் சலுகையினால் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டமாக உள்ளனனர்.

அமேசான் விற்பனையின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் தொடங்குகிறது.  

அமேசான் ஆப் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சம் வரை பரிசினை பெறலாம்.

மொபைல் போன்களுக்கு 40 சதவீதமும் ஆன்லைன் பேஷன் ஸ்டோரில் 90 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

வீட்டிற்கான சிறிய பொருட்கள் ரூ.88. மற்றும் ரூ. 99 விலைகளில் விற்கப்படுகின்றன. கேஜெட்டுகள் மற்றும் மின்னணு பொருட்களுக்க்கு உடனடி போனஸ் சலுகைகள் உண்டு. 

ப்ளிப்கார்ட் விற்பனையின் சில முக்கிய அம்சங்கள்

“தி பிக் பில்லியன் டேஸ்” முதல் நாளில் கூடுதலாக 10 சதவீதம் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

“கிராண்ட் ஸ்டீல்” சலுகையில் பிராண்டடு உடைகள் மற்றும் காலணிகள் ‘சீட் பெல்ட் போடவில்லையென்றால் விதிக்கப்படும் அபராதத்தை விடக் குறைவு' என்று அதிகாரப்பூர்வமாக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளாஷ் விற்பனையும் வேறுபல ஒப்பந்தங்களும் வழங்கப்படவுள்ளன.

செப்டம்பர் 29-30 அன்று காலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை “ரஷ் ஹவர்களில்” கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

ப்ளிப்கார்ட் பயணத்திற்கு விமான முன்பதிவில் ரூ. 25,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. 

பிக் பில்லியன் டேஸ்க்காக ப்ளிப்கார்ட் 50,000 நேரடி பணியினை வழங்கியுள்ளது. 

.