‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’

இருப்பினும் மத்திய அரசின் சீர் திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’

பொது முடக்கம் மார்ச் இறுதியில் ஏற்படுத்தப்பட்டு, 100 நாட்களை கடந்தும் தொடரப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.5 சதவீதமாக குறைய வாய்ப்பு
  • சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பொது முடக்கம் தொடர்ந்து நீட்டிப்பு
  • பொருளாதார நலன்களுக்காக உலக நாடுகள் ஒன்றுக்கொன்று சார்ந்து செயல்படுகின்றன.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.5 சதவீதமாக குறைந்து விடும் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தின்போது இந்திய பொருளாதாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளியிடப்பட்டன. அந்த சமயத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக நடப்பாண்டில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பொது முடக்கம் மார்ச் இறுதியில் ஏற்படுத்தப்பட்டு, 100 நாட்களை கடந்தும் தொடரப்பட்டுள்ளது. இதனால் முக்கிய பல தொழில்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன.

அதை விட முக்கிய காரணம் என்னவென்றால், கொரோனாவுக்கு தடுப்பு மருந்தோ அல்லது பாதிக்கப்பட்டால் குணமளிக்கும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால்தான் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பொது முடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

இருப்பினும் மத்திய அரசின் சீர் திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார நலன்களுக்காக உலக நாடுகள் ஒன்றுக்கொன்று சார்ந்து செயல்படுகின்றன.

இந்த சூழலில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே, அனைத்து நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.