This Article is From Aug 21, 2018

தன் மகனுக்கு வலி இல்லா மரணம் கேட்கும் ஏழை தந்தையின் பரிதாப நிலை

திருமேனி என்பவரது மகன் 2008-ம் ஆண்டு பிறந்ததில் இருந்தே நோய் வாய்ப்பட்டு உயிர் மட்டும் கொண்டு படுக்கையிலேயே இருக்கிறார்

தன் மகனுக்கு வலி இல்லா மரணம் கேட்கும் ஏழை தந்தையின் பரிதாப நிலை
Chennai:

சென்னையைச் சேர்ந்த திருமேனி என்பவரது மகன் 2008-ம் ஆண்டு பிறந்ததில் இருந்தே நோய் வாய்ப்பட்டு உயிர் மட்டும் கொண்டு படுக்கையிலேயே இருக்கிறார். தனது மகனின் வலி நிறைந்த இந்த வாழ்வை முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றத்தின் படி ஏறியுள்ளார் திருமேனி. மரணத்தை அடைவதற்கான உரிமையை அளிக்கும் ( பேசிவ் யுதென்ஷியா) சட்டத்தின் படி தனது மகனுக்கு மருத்துவம் பார்ப்பதை நிறுத்தி, அவரது மரணத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

மூளையில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக, ஒரு நாளுக்கு 20 - 30 முறை வரை வலிப்பு ஏற்படுகிறது. அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 150 முறை வரை வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, பார்வேந்தன் என்ற அந்த சிறுவனுக்கு. டெய்லராக பணிபுரியும் திருமேனி மாதம் 10,000 ரூபாய் வரை பார்வேந்தனின் மருத்துவத்துக்கு செலவு செய்து வருகிறார். பார்வேந்தனை பரிசோதித்த அனைத்து மருத்துவர்களும், அவரது நிலை மாற வழி இல்லை என்று கைவிரித்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார் திருமேனி.

மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த இறப்பதற்கான உரிமை, அதாவது ஒருவர் வலி நிறைந்து நோயால் பாதிக்கப்பட்டு இனி காப்பாற்ற முடியாது என்ற பட்சத்தில், அவர் விரும்பினால் மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மரணிக்க உரிமை அளிக்கப்படுகிறது.

திருமேனியின் மனு குறித்து நீதிமன்றம் கமிட்டி ஒன்றை உருவாக்கி, அதற்கு தமிழக அரசு நியமித்த மருத்துவர்களின் குழு பரிந்துரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கமிட்டி சிறுவனை பற்றி விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தன் குழந்தை அனுபவித்த வலி போதும் என்று நினைத்த திருமேனி, வலி இல்லாத மரணத்தையாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தின் படி ஏறியுள்ளார் திருமேனி.

.