This Article is From Nov 30, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கடைசி நாளாக இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பொது பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவுக்கு 30 வயதும் நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள மாணவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பப்டே, நாகேஸ்வரராவ் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு விவகாரத்தில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் தேர்வை எழுதலாம். இது வயது கட்டுப்பாடு என்பது கிடையாது என உத்தரவிட்டனர்.

இதனிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசத்தை மேலும் ஒருவாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.7 வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


 

.