This Article is From Dec 06, 2018

பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனத்தில் வெடி விபத்து: ஆய்வாளர் உயிரிழந்தார்

மதியம் 2.15 அளவில் ஹைட்ரஜன் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்னறன.

பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனத்தில் வெடி விபத்து: ஆய்வாளர் உயிரிழந்தார்

பெங்களூருவில் ஐ.ஐ.எஸ். கல்வி நிறுவனம் கடந்த 1909-ல் ஏற்படுத்தப்பட்டது.

Bengaluru:

பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.) நிறுவனத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார்.

கல்வி நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் லேபில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 2.15-க்கும் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் சிக்கிதான் ஆய்வாளர் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையே வெடி விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனம் கடந்த 1909-ல் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் மிக முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு வெடி விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

.