This Article is From May 13, 2019

வருகிறது விர்ச்சுவல் ரியாலிட்டி ஜிம்: இனி விளையாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்!

நீங்கள் விளையாடுவது போன்ற அனுபவத்தையே அளிக்கும். ஆனால் உங்களுக்கே தெரியாமல், நீங்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பீர்கள்.

வருகிறது விர்ச்சுவல் ரியாலிட்டி ஜிம்: இனி விளையாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்!

உலகின் முதல் விர்சுவல் ரியாலிடி ஜிம், ப்ளாக் பாக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு.

டெக்னாலஜி உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம் விர்ச்சுவல் ரியாலிட்டி(Virtual Reality). நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, உங்கள் சுற்றுச்சூழலலை விட்டு மற்றொரு சுற்றுச்சூழலை அனுபவிக்க வேண்டும், இதுவரை பார்த்திராத விஷயங்களை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை பெற வேண்டும், அட அமர்ந்த இடத்தில் இருந்துக்கொண்டே வானில் பறப்பதுபோன்ற உணர்வை பெற வெண்டும், இவை அனைத்தையும் பெற, நீங்கள் ஒரு கண்ணாடியை மாட்டினால் போதும் என்றால், யார் தான் செய்ய மாட்டார்கள். அப்படியான ஒரு தொழில்நுட்பம் தான் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி.

இந்த விர்ச்சுவல் ரியாலிட்டியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகளை நீங்கள் மாட்டிக்கொண்டால், அது உங்களுக்கு வேறு விதமான அனுபவத்தை அளிக்கும். நீங்கள் ஒரு விஷயத்தை நேரில், அதன் அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை அது அளிக்கும். அப்படியான விர்ச்சுவல் ரியாலிட்டியில், நாளுக்கு நாள் ஒவ்வொரு புதிதான விஷயத்தை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அப்படி, சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு விஷயம்தான் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஜிம். இது என்ன செய்யும்? இதில் எப்படி உடற்பயிற்சி செய்யலாம்?

இது தான் உலகின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி ஜிம். இந்த ஜிம்-ஐ ப்ளாக் பாக்ஸ் நிறுவனம் அமேரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ப்ளாக் பாக்ஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஜிம் எனவும் பெயரிட்டுள்ளது. இந்த உலகில் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி ஜிம்-ன் உதவியுடன், இனி உடற்பயிற்சி செய்வது மிக எளிதாக இருக்கும். இந்த ஜிம்-ல் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது, நீங்கள் உடற்பயிற்சி செய்வது போன்ற உணர்வையே அது அளிக்காது. ஏதாவது ஒரு வீடியோ கேம் விளையாட்டை விளையாடுவது போன்றிருக்கும்.

ABC நியூஸ் குறிப்பிடும் தகவலின்படி, இந்த ஜிம்-ல் விளையாட வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு அறை வழங்கப்படுகிறது. அதில் அவர்களுக்கான, அனைத்து சாதனைகளும் வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்து தங்களின் உடல்களில் பொருத்திக்கொண்டு, அவர்கள் விளையாட துவங்கலாம். இந்த அமைப்பு, நீங்கள் விளையாடுவது போன்ற அனுபவத்தையே அளிக்கும். ஆனால் உங்களுக்கே தெரியாமல், நீங்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பீர்கள். இதில் தங்களின் முந்தைய சாதனைகளை முந்துவதர்காகவும் விளையாடலாம், அதே நேரம், வேறு நபர்களுடனும் போட்டி போடலாம்.

இது குறித்து ப்ளாக் பாக்ஸ் நிறுவனம், தன் இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பது,"நீங்கள் ப்ளாக் பாக்ஸ் அறைக்குள் ஒரு பிரத்தியேகமான தலைகவசத்தை அணிந்து நுழைவீர்கள், நீங்கள் உள்ளே நுழைந்ததும் உங்களை சுற்றி மற்றொரு புதிய உலகம் உருவாகியிருக்கும்" என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஜிம் பற்றி குறிப்பிடுகையில்,"இதில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது, உங்கள் முழு உடலுக்கும் பயிற்சி கிடைக்கும், மேலும் நீங்கள் உடற்பயிற்சி செய்வது போன்று ஒரு உணர்வு இல்லாமலேயே, இதில் மூழ்கிவிடுவீர்கள்."

இதில் நீங்கள் ஒரு கயிறை தூக்க சென்றாலோ அல்லது ஒரு பொருளை தூக்க முயற்சித்தாலோ,  உண்மையான கயிறை, அந்த பொருளை தொடுவது போன்ற உணர்வை பெறுவீர்கள். மேலும், அந்த பொருள் எவ்வளவு எடை இருக்குமோ, அதே எடையை நீங்கள் உங்கள் கைகளில் உணர்வீர்கள்.

Click for more trending news


.