This Article is From Nov 04, 2018

தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பலாம்: ஜெயக்குமார்

டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பலாம்: ஜெயக்குமார்

டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தீபாவளி எங்களுக்கு நல்ல தீபாவளி. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள். நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அதைபோல் எந்த இயக்கம் அவர்களை அடையாளம் காட்டியதோ? எந்த இயக்கத்தால் உண்டு, கொழுத்து வளர்ந்தார்களோ?. அவர்கள் தான் இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று, செயல்பட்டு இன்றைக்கு அழிந்து போய் இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் தான் நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதை மறைத்து திரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதேபோல் தி.மு.க. ஆட்சியில் வயிற்றுபோக்கு, காலரா போன்ற நோய்கள் பாதிப்பு இருந்தது.

தமிழகத்தில் மருத்துவ அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.

டி.டி.வி. தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் திரும்பலாம். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம்.

எப்போது வேண்டுமானலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தான் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.