This Article is From Feb 04, 2020

“இதுதான் சிறந்த பட்ஜெட்… விமர்சகர்களே ஏற்றுக் கொள்வார்கள்!”- பிரதமர் மோடி

"நம்மை விமர்சிக்கும் நபர்கள் கூட, உலக சூழலை வைத்துப் பார்க்கும் போது இது சிறந்த பட்ஜெட்டாகவே உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்"

“இதுதான் சிறந்த பட்ஜெட்… விமர்சகர்களே ஏற்றுக் கொள்வார்கள்!”- பிரதமர் மோடி

வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நட்டா.

New Delhi:

“மத்திய பட்ஜெட் மிக மோசமானதாக இருந்தது என்று பலர் பிரசாரம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், தற்போது விமர்சகர்கள் கூட, உலக நிலைமையைப் பார்க்கும் போது இதுதான் சிறந்த பட்ஜெட் என்று சொல்லும் நிலை இருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மோடி, மத்திய பட்ஜெட் பற்றி பேசுகையில், “இந்த பட்ஜெட் மோசமானது என்று பலர் பிரசாரம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், மக்களுக்கு இது ஒரு நல்ல பட்ஜெட் என்று தெரிகிறது.

நம்மை விமர்சிக்கும் நபர்கள் கூட, உலக சூழலை வைத்துப் பார்க்கும் போது இது சிறந்த பட்ஜெட்டாகவே உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்,” என்றார். 

பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர் பங்கேற்கும் முதல் கட்சிக் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் அவருக்குப் பிரதமர் மோடி, மரியாதை செய்தார்.

வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நட்டா. அவர் மேலும் 240-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வாக்கு சேகரித்து வருவதாகக் கூறினார். 

.