This Article is From Apr 16, 2019

55 ஆண்டுகாலம் காங்கிரஸ் என்ன செய்தது - ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் கேள்வி

Election 2019: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் அனைத்து மேம்பாட்டு பணிகளையும் நிறுத்தி விட்டதாகவும் எந்தவொரு துறையிலும் முன்னேற்றம் இல்லை என்றும் கூறினார்.

55 ஆண்டுகாலம் காங்கிரஸ் என்ன செய்தது - ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் கேள்வி

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது - வசுந்தரா ராஜே

Sikar, Rajasthan:

‘இனி நியாயம் கிடைக்கும்' என்ற அறிவிப்போடு காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.  இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார்.  ‘நியாயத்தைப் பற்றி இப்போது பேசுகிறீர்கள் 55 வருடத்தில் நாட்டிற்கு என்ன செய்தீர்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஊழ நிறைந்த அரசாங்கமாக இருந்து வந்தது. நிலக்கரி மற்றும் 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் என அனைத்தும் நடத்தது என்று குற்றம் சாட்டினார்.

சிக்கார் பிரசாரத்தில் வார பத்திரிகைகளில் வயதான பெண்ணை கட்டிப்பிடித்தபடி ‘இனி நியாயம் கிடைக்கும்' என்ற டேக் லைனில் காங்கிரஸ் பிரச்சார புகைப்படத்தை குறிப்பிட்டு 55 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்று பேசினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் அனைத்து மேம்பாட்டு பணிகளையும் நிறுத்தி விட்டதாகவும் எந்தவொரு துறையிலும் முன்னேற்றம் இல்லை என்றும் கூறினார்.

கவுரவ் சாலைக் கட்டுமானம் கூட பாதியில் நின்று விட்டது. சமூக பாதுகாப்புத்திட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

.