உதவியாளரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வாங்கி தருவேன்: ஸ்மிர்தி இரானி

தேர்தல் முடிவுகள் 2019: பாஜக ஆதரவாளர் சுரேந்தர் சிங்கை கொலை செய்ததன் மூலம், அமேதியை பயங்கரவாத பகுதியாக, உருகுலைக்கவும், பணிந்தத்தாகவும் நினைக்கின்றனர் என ஸ்மிர்தி இரானி தெரிவித்துள்ளார்.

உதவியாளரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வாங்கி தருவேன்: ஸ்மிர்தி இரானி

சுரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஸ்மிர்தி இரானி ஆறுதல் தெரிவித்தார்.

Amethi:

அமேதியில் ராகுல் காந்தியை படுதோல்வி அடைய வைத்து காங்கிரஸூக்கு கடும் அதிர்ச்சி கொடுத்த ஸ்மிர்தி இரானி, அமேதியை அன்பாக பார்த்துக்கொள்ளுங்கள் என்ற ராகுலின் தகவலை பெற்றதாக உரக்க கூறினார். 

உத்திர பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுயில் முன்னாள் கிராமத் தலைவரும், ஸ்மிர்தி இரானிக்காக தேர்தல் பணியாற்றிய பாஜக ஆதரவாளருமான சுரேந்தர் சிங் சனிக்கிழமையன்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். 

அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில சந்தேகத்திற்கு உரிய நபர்களை காவலில் வைத்திருக்கிறோம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது பழைய சர்ச்சை அல்லது அரசியல் தகராறாக இருக்கலாம் என்று அமேதி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுரேந்திர் சிங் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தத்தெடுத்த கிராமத்தில் உள்ளவர். பரோலியா கிராமத்தின் முன்னாள் தலைவர். ஸ்மிரிதி இராணி மக்களவை பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக பங்கேற்றார். பொதுக்கூட்டங்களில் தனது பேச்சு மூலமாக பாஜக தலைவர்களிடையே புகழ்பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், சுரேந்திர சிங் மரணத்தை தொடர்ந்து, அமேதி வந்த ஸ்மிர்தி இரானி அவரது இறுதி சடங்குகளில் பங்கேற்றார். அப்போது அவர் கூறும்போது, 23ஆம் தேதியன்று அமேதியை அன்பாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு ஒரு செய்தி வந்தது. அந்த தகவல் அனுப்பிய நபருக்கு நான் கூறுவது, நான் உங்கள் செய்தியை தெளிவாகவும் உரக்க பெற்றதாகவும் ராகுலை குறிப்பிட்டு ஸ்மிர்தி கூறினார். 

கடந்த வியாழனன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது, அமேதியில் ராகுல் படுதோல்வி அடைய உள்ளார் என்பது காலை முதல் தெளிவாக தெரிந்தது. இதைத்தொடர்ந்து, தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ராகுல், வெற்றி பெற்ற ஸ்மிர்தி இரானிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, அமேதியை அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்மிர்திக்கு ராகுல் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக ஆதரவாளர் சுரேந்தர் சிங்கை கொலை செய்ததன் மூலம், அமேதியை பயங்கரவாத பகுதியாக, உருகுலைக்கவும், பணிந்ததாகவும் நினைக்கின்றனர் என ஸ்மிர்தி தெரிவித்தார். மேலும், அமேதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சுரேந்திரின் நினைவில் வளர்ச்சியை பெறும் என்று அவர் தெரிவித்தார். 

சுரேந்திர் கொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வாங்கி தருவேன் என்றும் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அனுகவும் தான் தயாராக இருப்பதாக ஸ்மிர்தி தெரிவித்துள்ளார்.