ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பலி என தகவல்!

வாகாதி கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் இன்று காலை 9.45 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் போது, குறைந்தது 100 பேர் தொழிற்சாலையில் இருந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பலி என தகவல்!

பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Mumbai:

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள அந்த ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த விபத்து குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, வாகாதி கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் இன்று காலை 9.45 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின் போது, குறைந்தது 100 பேர் தொழிற்சாலையில் இருந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.  

தொழிற்சாலையில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்துள்ளன என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இதுவரை 8 பேர் உடல்கள் போலீசார் மற்றும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


 

More News