This Article is From Jul 20, 2020

சென்னை அரசு மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக பயிற்சி மருத்துவர் தற்கொலை?

இதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சென்னை அரசு மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக பயிற்சி மருத்துவர் தற்கொலை?

சென்னை அரசு மருத்துமைனயில் பணிச்சுமை காரணமாக பயிற்சி மருத்துவர் தற்கொலை?

சென்னை ஸ்டான்லி மருத்துமைனயில் பயிற்சி மருத்துவர் ஒருவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் (24). இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் முழுவதும் இவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தங்கும் விடுதியின் 3வது மாடியில் இருந்து மருத்துவர் கண்ணன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, கண்ணனின் உடலை கைப்பற்றிய போலீசார், இவர் பணி சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ஏதேனும் குடும்ப பிரச்சனையின் காரணமாக இத்தகைய முடிவு எடுத்தாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மருத்துவர் கண்ணனுக்கு திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கண்ணனின் விருப்பத்தின் படியே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

.