தெலங்கானாவில் எரித்து கொல்லப்பட்ட தாசில்தாரை காப்பாற்ற சென்ற டிரைவரும் உயிரிழப்பு!

தெலங்கானாவின், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் பகுதியில் தாசில்தார் விஜயா ரெட்டி தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

தெலங்கானாவில் எரித்து கொல்லப்பட்ட தாசில்தாரை காப்பாற்ற சென்ற டிரைவரும் உயிரிழப்பு!

தாசில்தார் விஜயாவை காப்பாற்றச் சென்ற போது ஓட்டுனரும் தீக்காயம் அடைந்தார்

Hyderabad:

தெலங்கானாவில் எரித்து கொல்லப்பட்ட தாசில்தாரை காப்பாற்றச் சென்ற போது தீக்காயம் அடைந்த ஓட்டுனரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

தெலங்கானாவின், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் விஜயா ரெட்டி (38). அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் நிலம் சம்பந்தமான பிரச்னை தொடர்பாக நேற்றைய தினம் தாசில்தார் அலுவலகத்தில், விஜாயவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை விஜயா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதனை பார்த்த விஜயாவின் ஓட்டுநர் மற்றும் சில அலுவலர்கள் விஜயாவை மீட்க போராடியுள்ளனர். இதில், அவர்களுக்கும் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், இன்று காலை தாசில்தார் விஜயாவின் ஓட்டுநர் குருநாதன், மருத்துவமனையிலே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என ராச்சகொண்டா காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

Newsbeep

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, தாசில்தார் விஜயா ரெட்டியின் அறைக்குள் ஆவணங்களுடன் ஒருவர் சென்றுள்ளார். பின்னர் அறை மணி நேரம் கழித்து அறையின் உள்ளே இருந்து தீயில் எரிந்த படி வெளியே வந்தார். உடனடியாக அவரது ஊழியர்கள் அவரை போர்வை சுற்றி காப்பாற்றச் சென்றனர். எனினும், அவரை காப்பாற்ற முடியவில்லை சிறுது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சுரேஷ் ஏதர்ச்சியாக இந்த கொலையை செய்யவில்லை என்றும் அவர் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே தாசில்தார் அலுவலகம் வந்துள்ளார் என்றனர். 
 

(With inputs from PTI)