This Article is From Jun 07, 2020

இந்தி நடிகருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் ராமதாஸ்

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகளை செய்துக்கொடுத்து உதவினார். இந்த உதவிக்கு தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் ராமதாஸ்

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்கம் அமலாக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. பல்வேறு தொழில்களும் கிட்டதட்ட 60 நாட்களுக்கும் மேலாக முடங்கியது. பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்தனர். போக்குவரத்து முடக்கம் மற்றும் வருமானம் இல்லாத காரணத்தினால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்தனர்.

இதனை கண்ட பல சமூக ஆர்வலர்கள் புலம் பெயர் தொழிலாளிகளுக்கு உதவிகளை செய்தனர். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் மும்பையில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகளை செய்துக்கொடுத்து உதவினார். இந்த உதவிக்கு தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

.