This Article is From Jul 11, 2019

தோனி, ஓய்வு பெறும் எண்ணத்தை நினைத்தும் பார்க்காதீர்கள் : பாடகி லதா மங்கேஸ்கர்

உலக கோப்பையில் இருந்து தோல்வியுற்று வெளியேறியதற்காக தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகலாம் என்று யூகம் நிலவி வருகிறது.

தோனி, ஓய்வு பெறும் எண்ணத்தை நினைத்தும் பார்க்காதீர்கள் : பாடகி லதா மங்கேஸ்கர்

இந்த நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு பெறும் எண்ணத்தை நினைத்தும் பார்க்காதீர்கள்- லதா மங்கேஸ்கர்

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. 

உலக கோப்பையில் இருந்து தோல்வியுற்று வெளியேறியதற்காக தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகலாம் என்று யூகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தி இசை உலகின் பிரபலமான பாடகி லதா மங்கேஸ்கர் “வணக்கம் தோனி, நீங்கள் ஓய்வு பெறப்போவதாக கேள்விப் பட்டேன். தயவு செய்து அதை செய்யாதீர்கள். இந்த நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு பெறும் எண்ணத்தை நினைத்தும் பார்க்காதீர்கள்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

லதா மங்கேஸ்கரின் ட்விட்டை பலரும் வரவேற்றுள்ளனர். 14,000 பேர் இந்த ட்விட்டிற்கு லைக் இட்டுள்ளனர். பல நெட்டிசன்கள் இதை அங்கரீத்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனான விராத் கோலி “தோனி ஓய்வு பெறுவது குறித்து ஏதும் எங்களிடம் பேசவில்லை” என்று  தெரிவித்துள்ளார். 

Click for more trending news


.