This Article is From Dec 21, 2018

''எல்லா தவறும் என்னுடையதே'' - பாகிஸ்தான் சிறையிலிருந்து வந்த ஹமிது அன்சாரி

ஹமிது நிஹல் அன்சாரி விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியதும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

''எல்லா தவறும் என்னுடையதே'' -  பாகிஸ்தான் சிறையிலிருந்து வந்த ஹமிது அன்சாரி

33 வயதான ஹமிது அன்சாரியை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது.

New Delhi:

33 வயதான ஹமிது நெஹால் அன்சாரி தனக்கு ஆன்லைனில் பழக்கமான பெண் தோழியை, கட்டாய திருமணத்திலிருந்து பாதுகாக்க ஆப்கானிலிருந்து அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அதனால் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் "இந்த விஷயம் மகிழ்ச்சியாக முடியும் என்று நினைத்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி திரும்ப கிடைக்க 6 வருடங்களாகியுள்ளன" என்றார்.

ஹமிது நிஹல் அன்சாரி விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியதும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

33 வயதான ஹமிது அன்சாரியை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது. அவர் தனது ஆறு வருட சிறையில் அனுபவத்தை கூறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று காவலர்கள் தெரிவித்தனர். மத்திய அமைச்சரிடம் தனது வழக்கை விரைவாக மீட்டு தந்தமைக்கு நன்றி தெரிவித்தார் அன்சாரி.

மேலும் அன்சாரி '' நான் இப்போது இந்தியாவில் இருக்கிறேன் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்ச்சியளிக்கிறது. நான் எல்லையில் நாடு திரும்பும் போது இத்தனை அன்பையும், மகிழ்ச்சியையும் நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

"இதில் யாரையும் குறை கூற விரும்பவில்லை. அனைத்து தவறுகளுமே என்னுடையது தான். எனது நோக்கம் சரியானதாக இருந்தாலும். அதற்காக நான் எடுத்த முயற்சி தவறானது. அதற்கான விலையாக சிறையை பார்த்தேன்" கூறினார். 

பாகிஸ்தானில் இருந்தபோது ஆதரவளித்த மக்கள், அரசு, ஊடகங்கள் அனைத்துக்குமே நன்றி தெரிவிப்பதாக கூறினார். அன்சாரியின் குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

.