This Article is From Feb 06, 2019

பத்து ஆண்டுகளில் எய்ட்ஸ் இல்லா அமெரிக்கா: ட்ரம்ப்பின் புதிய கனவு!

2017 தகவலின் படி அமெரிக்காவில் 38,000 பேருக்கு ஹச்ஐவி தொற்று உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் குறைந்து வருகிற‌து.

பத்து ஆண்டுகளில் எய்ட்ஸ் இல்லா அமெரிக்கா: ட்ரம்ப்பின் புதிய கனவு!

ட்ரம்ப் அரசு, சென்ற ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான பட்ஜெட்டை குறைக்க சொன்னதை காங்கிரஸ் எதிர்த்தது.

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மாகண உரையில் இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து முழுமையாக எய்ட்ஸை ஒழிப்போம் என்று உறுதியெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அனைத்து அறிவியல் தடைகளையும் வென்று இந்த கனவை நிறைவேற்ற வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக் கொண்டார்.

இந்த பட்ஜெட்டில் அமெரிக்காவிலிருந்து எய்ட்ஸ் நோயை 10 வருடங்களில் அகற்ற ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரை ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

2017 தகவலின் படி அமெரிக்காவில் 38,000 பேருக்கு ஹச்ஐவி தொற்று உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் குறைந்து வருகிற‌து. ஆனாலும் சிலர் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர் என்று கூறினார்.

ட்ரம்ப் அரசு, சென்ற ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான பட்ஜெட்டை குறைக்க சொன்னதை காங்கிரஸ் எதிர்த்தது. கடந்த சில வருடங்களில் வெகுவாக எய்ட்ஸ் குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடம் ட்ரம்ப் எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து உதவி கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பில்கேட்ஸ் "அவர் என்னை இருமுறை சந்தித்த போது ஹச்ஐவிக்கும், ஹச்பிவி எனும் இன்னோரு பாலியல் நோய்க்கும் உள்ள வித்தியாசம் குறித்து கேட்டார்" என்றார்.

.