This Article is From Jun 30, 2019

ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் ட்ரம்ப் மற்றும் கிம் சந்திப்பு

ராணுவம் விலக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்பட்டாலும், அதனை தாண்டியுள்ள பகுதி உலகிலேயே அதிகப்படியான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள ஒரு எல்லை பகுதியாகும்.

கிம்மிற்கும் தனக்கும் இடையே நல்லதுதொரு உறவு வளர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்

Panmunjom, South Korea:

வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பெனின்சுலாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.

ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில் ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் சந்திப்பு நடந்துள்ளது.

”ட்ரம்ப் மற்றும் கிம் இருவரும் அமைதிக்காக கைக்குலுக்குவார்கள்," என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.

huic42p

இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாக தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்தான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது.

ஒரே வருடத்தில் ட்ரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர்.
ட்விட்டரில் டிரம்ப் விடுத்த அழைப்பை "சுவாரஸ்யமானது" என வடகொரியா தெரிவித்திருந்தது.

முன்னதாக தென்கொரிய தலைநகர் சோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கிம்மிற்கும் தனக்கும் இடையே நல்லதுதொரு உறவு வளர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்

"அந்த சந்திப்பு மிகவும் குறைந்த நேரத்துக்குதான ஒரே ஒரு கைக்குலுக்கல். இருந்தாலும் பரவாயில்லை. ஒரு கைக்குலக்கலுக்கு பல அர்த்தங்கள் உண்டு." என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ராணுவம் விலக்கப்பட்ட பகுதி பெனின்சுலா

4 கிமீ அகலத்தில் 250 கிமீ தூரத்துக்கு இந்த பகுதி உள்ளது. 1953ஆம் ஆண்டு கொரிய போரின் முடிவுக்கு பிறகு தென் மற்றும் வடகொரியாவை இந்த பகுதி பிரித்து வருகிறது.

ராணுவம் விலக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்பட்டாலும், அதனை தாண்டியுள்ள பகுதி உலகிலேயே அதிகப்படியான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள ஒரு எல்லை பகுதியாகும்.

ராணுவம் விலகப்பட்ட பகுதியின் இருபுறமும் உள்ள கூட்டு பாதுகாப்பு பகுதியில் தான் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும்.

.