“ஒரு குட்டி கதை சொல்லட்டுமா..?”- ‘மாஸ்டர்’ விஜய் பாணியில் ரஜினி, ராமதாஸை சீண்டிய திமுக எம்பி!!

சமீக காலமாக தனது திரைப்படங்களில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக வசனங்களை வைக்கத் தவறுவதில்லை விஜய்

“ஒரு குட்டி கதை சொல்லட்டுமா..?”- ‘மாஸ்டர்’ விஜய் பாணியில் ரஜினி, ராமதாஸை சீண்டிய திமுக எம்பி!!

குறிப்பாக ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை அவர் படங்கள் மூலம் விமர்சித்தது பெரிய அளவுக்கு ரீச் ஆனது

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு ‘ஒரு குட்டி கதை' என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலை வாக்கில் இது குறித்தான அறிவிப்பை மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், இந்த ‘ஒரு குட்டி கதை' என்னும் வாக்கியத்தை வைத்து தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்பி, செந்தில் குமார், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸை கேலி செய்துள்ளார். 

அவர், “ஒரு குட்டி உண்மை கதை சொல்லட்டுமா ரஜினிகாந்த், ராமதாஸ். 2021ல் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மிக பெரிய அவமானமான தோல்வியை சந்திக்கப் போறாங்க. இந்த அவமரியாதையை உங்களுக்கு அளிக்கப் போவது அர்ஜுனன்/கிருஷ்ணர் என்று நீங்கள் நம்பும் இருவர். டெல்லியில் செய்ததை விட மிக சிறப்பாக செய்வார்கள்,” என்று ரஜினி, மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரையும் சீண்டியுள்ளார். 

சமீக காலமாக தனது திரைப்படங்களில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக வசனங்களை வைக்கத் தவறுவதில்லை விஜய். குறிப்பாக ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை அவர் படங்கள் மூலம் விமர்சித்தது பெரிய அளவுக்கு ரீச் ஆனது. அதேபோல அதிமுக அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் சில கருத்துகளை தன் படங்கள் மூலம் முன்வைத்தார் விஜய்.

இப்படிப்பட்ட சூழலில்தான், சில நாட்களுக்கு முன்னர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். இதனால் கடந்த சில தினங்களாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளார் விஜய். இந்நிலையில் விஜய் படத்தில் வரும் பாடல் பெயரை வைத்தே ரஜினி மற்றும் ராமதாஸை திமுக எம்பி செந்தில் குமார் கிண்டல் செய்துள்ளது வைரலாகியுள்ளது. 
 

More News