This Article is From Dec 21, 2018

ஆர்.கே.நகர் போல் 234 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடையும்: எச்.ராஜா

ஆர்.கே.நகர் போல் 234 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடையும்: என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் போல் 234 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடையும்: எச்.ராஜா

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவானது கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்,

பிரதமர் நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நடந்துகொள்வதற்கு பதிலாக தன்னை ஒரு மன்னராக கருதி செயல்பட்டு வருகிறார். தன்னை ஒரு பிரதமராக மட்டும் கருதாமல் தானே ஜனாதிபதியாகவும், தானே சி.பி.ஐ. அமைப்பாகவும், தானே வருமான வரித்துறையாகவும் கருதி செயல்பட்டு வருகிறார். இதனால் தான் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்.

தமிழகத்தின் நலனுக்கு மத்திய பாஜக அரசு செய்தது என்ன? கஜா புயல் போன்ற பேரிடர் குஜராத்தில், மராட்டியத்தில் ஏற்பட்டிருந்தால் நரேந்திர மோடி சென்றிருப்பார் அல்லவா? ஒரு சேடிஸ்ட் மனப்பான்மையில் உள்ளவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதை பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். அதனால் தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறோம் என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்..

இந்நிலையில், கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது,

மோடி குறித்து ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். கருணாநிதிக்காக பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்திய தலைவர் மோடி. கருணாநிதி சிலையை திறக்க சோனியாவை அழைத்தது ஏன். இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் தமிழின துரோகிகள்.

சர்ச்சை பேச்சு இருந்தால்தான் அறிவு வளரும். உண்மையை சொன்னால் என்னை தேச விரோதிகள் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆர்.கே.நகர் போல் 234 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடையும். பாஜகவில் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். திமுக கூட்டணி தானாகவே உடைந்து போகும் என்று அவர் கூறினார்.

.