This Article is From Oct 09, 2019

தீபாவளிப் பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு!!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 62 லட்சம் ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

New Delhi:

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். இதனை தீபாவளி பரிசு என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனால் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பலன் அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

இதன்படி தற்போது வழங்கப்பட்டு வரும் 12 சதவீத அகவிலைப்படி, 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் மத்திய அரசுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். 

மத்திய அரசின் நடவடிக்கை பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
 

.