பொது சொத்துகளை அழிப்பவர்களை சுட்டுத் தள்ளவேண்டும் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

.“உத்தர பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடக அரசுகள் தேச விரோத சக்திகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் மூலம் சரியாக அதைக் கையாண்டனர்” என்று பாஜக தலைவர் கூறினார்.

பொது சொத்துகளை அழிப்பவர்களை சுட்டுத் தள்ளவேண்டும் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

இது என்ன அவர்களின் அப்பா வீட்டு சொத்தா? -திலீப் கோஷ் (File)

Kolkata:

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை உத்தர பிரதேசத்தில் சுட்டுக் கொன்றது போலவே சுட்டுக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினார்.

மேற்கு வங்காளாத்தின் நதியா மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திலீப் கோஷ், “குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது ரயில்வே சொத்து மற்றும் பொது போக்குவரத்தை அழித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தாதற்கும் லத்தி ஜார்ஜ்க்கு கட்டளையிடாததற்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

“இது என்ன அவர்களின் அப்பா வீட்டு சொத்தா? வரி செலுத்துவோரின் பணத்தில் கட்டப்பட்ட அரசாங்க சொத்துக்களை எப்படி அவ்வாறு அழிக்க முடியும்” என்று திலீப் கோஷ் கூறினார்.

“உத்தர பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடக அரசுகள் தேச விரோத சக்திகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் மூலம் சரியாக அதைக் கையாண்டனர்” என்று பாஜக தலைவர் கூறினார்.

நாட்டில் இரண்டு கோடிபேர் “முஸ்லீம் ஊடுருவல்கள்” இருப்பதாகக் கூறியதால் இந்து வங்காளிகளின் நலன்களைக் நாசமாக்கும் நபர்களை அடையாளம் காணவும் கோஷ் அழைப்பு விடுத்தார். அதில் ஒரு கோடிபேர் மேற்கு வங்கத்தில் உள்ளனர். மம்தா பானர்ஜி அவர்களை பாதுக்காக முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.