தீ விபத்தால் பாதித்த மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் சீரானது!

களிண்டி கஞ்ச்: ஜசோலா விகார், சாஹீன் பாக், களிண்டி கஞ்ச் உள்ளிட்ட தென்கிழக்கு டெல்லியில் அடுத்தடுத்து உள்ள மெட்ரோ ரயில்நிலையங்கள் ஆகும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Delhi Metro Magenta Line: களிண்டி கஞ்ச் பகுதியில் உள்ள பர்னிச்சர் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது.


New Delhi: 

டெல்லியில் பர்னிச்சர் சந்தைகள் உள்ள பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

டெல்லியில் உள்ள களிண்டி கஞ்ச் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மர பொருட்கள் சந்தை அமைந்துள்ளது. இன்று காலை இங்க திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 17 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பி வைக்கப்பட்டது, தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மர பொருட்கள் எரிந்து நாசமாகின. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்து காரணமாக ஜசோலா விகார், சாஹீன் பாக், களிண்டி குன்ச் உள்ளிட்ட பகுதிகளில் இடையே மெட்ரோ ரெயில் சேவை சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தீ விபத்தால் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................