This Article is From Feb 10, 2020

டெல்லியில் மானிய விலையில் மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்

21வது நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் மானிய விலையில் மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துகள் வெளியாகியுள்ளது.

New Delhi:

மலிவான விலையில் மின்சாரம் வழங்குவது என்பது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில் ஒரு பகுதியாக மாறியுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், அது உங்களுக்கு வாக்குகளை பெற்று தரும் என்பதையும் டெல்லி காட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவிலும் டெல்லி ஆம் ஆத்மி அரசு போல மின்சாரத்திற்கு மானியம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்ததை தொடர்ந்து, 21வது நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மலிவான விலையில் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் ஒரு பகுதியாக மாறியுள்ளது. மலிவான விலையிலோ, அல்லது இலவசமாகவோ மின்சாரம் வழங்க முடியும் என்பதை டெல்லி காட்டியுள்ளது. 

மேலும், அதன் மூலம் வாக்குகளை பெறலாம் என்பதையும் டெல்லி காட்டியுள்ளது. 21வது நூற்றாண்டில் இந்தியாவில் அனைவருக்கும் 24மணி நேரமும் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துகள் வெளியாகியுள்ளது. 
 

.