This Article is From Jan 13, 2020

டெல்லி: தேர்தல் வரும் சூழலில் ஆம் ஆத்மிக்கு தாவும் காங். நிர்வாகிகள்!! அதிர்ச்சியில் தலைமை!

Delhi election 2020: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மகாபால் மிஷ்ராவின் மகன் வினய் மிஷ்ரா, முன்னாள் எம்.எல்.ஏ. ராம் சிங் நேதாஜி ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

டெல்லி: தேர்தல் வரும் சூழலில் ஆம் ஆத்மிக்கு தாவும் காங். நிர்வாகிகள்!! அதிர்ச்சியில் தலைமை!

Delhi election 2020: வினய் மிஷ்ரா, ராம்சிங் நேதாஜி ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

New Delhi:

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு தாவத் தொடங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறது. 

டெல்லியில் பிப்ரவரி 8-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மகாபால் மிஷ்ராவின் மகன் வினய் மிஷ்ரா, முன்னாள் எம்.எல்.ஏ. ராம் சிங் நேதாஜி ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மகாபால் மிஷ்ராவின் மகன் வினய் மிஷ்ரா, முன்னாள் எம்.எல்.ஏ. ராம் சிங் நேதாஜி ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

அவர்களை தவிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏ.வும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவருமான நேதாஜி பெகானும் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். 

ஜெய் பகவான் உப்கார், நவீன் தீபு சவுத்ரி ஆகியோரும் ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளனர். டெல்லியில் மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆம் ஆத்மிக்கு 67 எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். 

டெல்லியில் ஆம் ஆத்மி செய்திருக்கும் மக்கள் சேவை பிடித்துப் போனதால் காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்வதாக நேதாஜி கூறியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 'டெல்லி அரசின் ஆட்சி, ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேரத் தொடங்கியுள்ளனர். அவர்களை கட்சி வரவேற்கிறது' என்று கூறியுள்ளார். 

70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் பிப்ரவரி 8-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குகள் பிப்ரவரி 11-ம்தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

கடந்த வாரம் முக்கிய காங்கிரஸ் நிர்வாகியான டெல்லியை சேர்ந்த சொயிப் இக்பால் ஆம் ஆத்மியில் சேர்ந்தார். அவர் மதியா மகால் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லியின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். 

காங்கிரசில் இருந்து ஆம் ஆத்மிக்கு நிர்வாகிகள் தாவுவது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 4 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பிரஹலாத் சிங் சாவ்னே, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார். இவர் கடந்த 1998, 2003, 2008 மற்றும் 2013-ல் நடைபெற்ற தேர்தல்களின்போது சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர். 
 

.