This Article is From Feb 11, 2020

'எங்களுக்கு 55 இடம் கிடச்சுரும்!'- டெல்லி தேர்தல் முடிவுக்கு முன் பாஜகவின் கான்ஃபிடன்ஸ்!

டெல்லி தேர்தலில் பாஜக 48 இடங்களை வெல்லும் என்றும், யாரும் EVM மெஷின்களை குறைசொல்லாதீர்கள் என்றும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

36 இடங்களில் வெல்லும் கட்சியே மெஜாரிட்டி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • 36 இடங்களில் வெல்லும் கட்சியே மெஜாரிட்டி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • '55 இடங்களை பிடிப்போம்' : நம்பிக்கை தெரிவித்த மனோஜ் திவாரி
  • யாரும் EVM மெஷின்களை குறைசொல்லாதீர்கள்
New Delhi:

கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக கட்சியின் எம்.பி மனோஜ் திவாரி. அப்போது பேசிய அவர் நடந்து முடித்த இந்த 70 தொகுதிகளுக்கான தேர்தலில், பாஜக 48-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்றும் 55 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக-வின் தொண்டர்கள் பெறவிருக்கும் இந்த வெற்றியை கொண்டாட ஏற்கனேவே தயாராகிவிட்டார்கள் என்று கூறிய அவர், முடிவு எப்படி இருந்தாலும் யாரும் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை குறைகூற கூடாது என்றும் தெரிவித்தார். இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெறும் பட்சத்தில் டெல்லியில் முதல்வராக மனோஜ் திவாரி தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கடைசி நேர வாக்கு எண்ணிக்கையின்போது வெளிவரும் முடிவுகள், தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 8ம் தேதி நடைபெற்ற வாக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், பாஜக எம்.பி மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த டெல்லி தேர்தலில் பாஜக 48 இடங்களை வெல்லும் என்றும், யாரும் EVM மெஷின்களை குறைசொல்லாதீர்கள் என்றும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலின், மாதிரி வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 53 இடங்களும், பாஜகவிற்கு 16 இடங்களும் மற்றும் காங்கிரஸ்-க்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் வெளிவர இருக்கும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி அனைத்து கட்சியினரும் காத்திருக்கும் நிலையில், 36 இடங்களில் வெல்லும் கட்சியே மெஜாரிட்டி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

.