This Article is From Feb 08, 2020

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு! 5.30 மணி வரையில் 52.95% வாக்குகள் பதிவானது

Delhi elections 2020: ஷாகின்பாக் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் தலைநகரில் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கிட்டதட்ட 2,700 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (File)

New Delhi:

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 52.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மொத்தத்தில், வாக்குகள் 60 சதவீதத்திற்குள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் 1.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பது, அல்ல மாற்றாக பாஜக அல்லது காங்கிரஸை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை வாக்காளர்களின் தேர்வாக இருக்கும். தேர்தலுக்காக, ஷாகின்பாக் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் தலைநகரில் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை 70 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதை ஆம் ஆத்மி இலக்காக கொண்டுள்ளது. இதற்காக கெஜ்ரிவால் தனது பிரச்சாரத்தில் முக்கியமாக நகரின் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை சரிசெய்வது மற்றும் புதிய நடவடிக்கைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, 2019 மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 7 இடங்களையும் பாஜக கைப்பற்றியதை வைத்து, கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியும் என பாஜக உறுதியாக நம்பிவருகிறது. எனினும், டெல்லி முதல்வர் யார் என்பதை பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்றும் பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது. 

15 வருடமாக டெல்லியை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, இந்த தேர்தலில் மீண்டும் தங்களது ஆட்சியை கொண்டு வரும் முயற்சியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என கிட்டதட்ட 700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சிஏஏவுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த பின்னர் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். 

 

.