This Article is From Dec 21, 2018

முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்கு இழப்பீடு! டெல்லி முதல்வர் அசத்தல்!

முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டு ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 முதல் 100 வரை வழங்கப்படும் என புதிய விதிமுறை டெல்லியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்கு இழப்பீடு! டெல்லி முதல்வர் அசத்தல்!

The compensation policy was cleared by Lieutenant Governor Anil Baijal in April

ஹைலைட்ஸ்

  • The compensation can go upto Rs 5000
  • Consumers will get Rs. 50 per hour for first 2 hours of power cuts
  • After that, the consumers will get Rs 100 per hour
New Delhi:

முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டு ஏற்பட்டால், டெல்லி மக்கள் ரூ.5,000 வரை இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

முதல் இரண்டு மணி நேரத்துக்கு 50 ரூபாயும் அதையடுத்து நீடிக்கும் ஒவ்வொரு மணி நேர மின்வெட்டுக்கு 100 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5,000 வரை இழப்பீடுத்தொகை வழங்கப்படும்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, நாட்டின் தலைநகரமான டெல்லியில் இனி அறிவிக்கப்படாத மின் தடை இருக்காது. அப்படி மின்தடை ஏற்பட்டால் பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். 

அதுமட்டுமல்லாமல் அறிவிக்கப்பட்ட மின்வெட்டின் போதும் மாலை 6 மணிக்கு மேல் மின்சார விநியோகம் செய்யப்படாத பட்சத்தில் இந்த இழப்பீடு தொகை பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி ட்விட்டர் பதிவில், 

இந்தியாவிலே முதல் மாநிலமாக முன் அறிவிப்பில்லாத மின்வெட்டுக்கு டெல்லி அரசு, இழப்பீடு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.