தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ராஜ்நாத்சிங்

அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டுத் தொழிலில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் வைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ராஜ்நாத்சிங்
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மா நிர்பர் பாரத்தின் (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக 101 ராணுவ தளவாட பொருட்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னர் இறக்குமதி செய்வதை பாதுகாப்பு அமைச்சகம் நிறுத்தும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பொருட்கள் தயாரிப்பதற்காக கிட்டத்தட்ட 260 திட்டங்கள் முத்தரப்பு சேவைகளால் ஏப்ரல் 2015 முதல் 2020 ஆகஸ்ட் வரை சுமார் 3.5 லட்சம் கோடி டாலர் செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டுத் தொழிலில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் "பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானங்கள், எடை குறைந்த போர் ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் மற்றும் பல பொருட்கள்" போன்ற உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகள் உள்ளன என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆயுதப்படைகள், பொது மற்றும் தனியார் தொழில் உட்பட அனைத்து தரப்பினருடனும் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகத்தால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.