This Article is From Jun 23, 2020

ரஷ்யாவில் சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பா? – மத்திய அரசு விளக்கம்

பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியில் இரு நாட்டு படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பா? – மத்திய அரசு விளக்கம்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் சுற்றுப் பயணம்
  • சீன பாதுகாப்பு அமைச்சரும் தற்போது ரஷ்யாவில் உள்ளார்
  • இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
New Delhi:

ரஷ்யா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் வே பெங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இரு நாட்டு அமைச்சர்கள் சந்தித்து பேசுவது தொடர்பாக, நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து குளோபல் டைம்ஸ் ட்விட்டரில் ஒரு தகவலை பகிர்ந்தது. அதில், சீன பாதுகாப்பு அமைச்சர் வே பெங்க், ரஷ்யாவின் வெற்றி பேரணியில் பங்கேற்பார். ரஷ்யா பயணத்தின்போது அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீனாவுடன் இந்தியா நெருங்கிய நட்பு பாராட்டி வந்த நிலையில், கடந்த வாரம் திங்கள் கிழமை ஏற்பட்ட சம்பவம் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் திங்களன்று, லடாக் எல்லையின் கல்வான் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். கற்கள், ஆணி அடிக்கப்பட்ட கம்பிகள் போன்ற ஆயுதங்கள் இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டன.

இதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் படுகாயம் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 என தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சீன பாதுகாப்பு அமைச்சர் வாங் யியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மத்திய வெளியறவு அமைச்சர் ஜெய் சங்கர், எல்லையில் நடைபெற்ற தாக்குதலுக்கு காரணமான சீன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியில் இரு நாட்டு படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இந்த சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதை நினைவுகூறும் வகையில் நாளை தலைநகர் மாஸ்கோவில் பேரணி நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மாஸ்கோவில் இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்று இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

.