This Article is From Jun 26, 2019

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் முன்னோட்டமா பிரதமரின் உரை...? : தெரிந்து கொள்ளுங்கள்

விவசாயத்தில் கார்ப்ரேட் முதலீடு ஏன் இல்லை? நாம் அதனை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். டிராக்டர்களை உருவாக்கினால் மட்டும் போதாது. உணவு பதப்படுத்துதல், கிடங்குகள், குளிர்ச்சியான சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் பெருநிறுவன முதலீடு தேவை என்று பிரதமர் மோடி கூறினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் முன்னோட்டமா பிரதமரின் உரை...? : தெரிந்து கொள்ளுங்கள்

நிர்மலா சீதாராமன் ஜுலை 5 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • விவசாயம், ஏற்றுமதி, ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
  • விவசாயத்தில் கார்ப்ரேட் முதலீடு அவசியம்
  • இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்.
New Delhi:

தேர்தல் முடிந்து பிரதமர் மோடியின் முதல் நாடாளுமன்ற உரையில் இன்னும் சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகளை குறித்து பேசியுள்ளார்.

வேளாண்மை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்த வேண்டு என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் உரையில் முதல் மூன்று வாரங்களில் இந்த அரசாங்கம் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. நாங்கள் எடுத்த இந்த முடிவுகள் விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளுக்கும் பயனளிக்கும். விவசாயம் தான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாலும். ஆனால், நாம் பழைய வழிகளை விட்டுவிட்டு சொட்டு நீர் பாசனம் போன்ற முறைகளை பின்பற்ற வேண்டும். உள்ளீட்டு செலவுகளை குறைக்க வேண்டும். என்று பிரதமர் மோடி தெரிவித்தார். “விவசாயத்தில் கார்ப்ரேட் முதலீடு ஏன் இல்லை? நாம் அதனை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். டிராக்டர்களை உருவாக்கினால் மட்டும் போதாது. உணவு பதப்படுத்துதல், கிடங்குகள், குளிர்ச்சியான சேமிப்பு கிடங்குகள் ஆகியவை பெருநிறுவன முதலீடு தேவை” என்று பிரதமர் மோடி கூறினார்.

அரசாங்கத்தின் முதன்மை உற்பத்தி திட்டத்தைப் பற்றி பேசியவர் “மேக் இன் இந்தியா குறித்து பலர் வேடிக்கையாக பேசினார்கள். ஆனால அது மறுக்க முடியாத ஒன்று. ஆயுதங்கள் தயாரிப்பதில் நமக்கு 250 வருட அனுபவம் உள்ளது. தற்போது 18 ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகள் இருக்கிறது. சீனாவில் ஒன்று கூட இல்லை. அனுபவம் இல்லை தொழிற்சாலைகளும் இல்லை. இன்று சீனா உலகம் முழுவதும் ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் ஏற்றுமதி செய்கிறது. நாம் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக இருக்கிறோம். இதிலிருந்து நம் நாட்டை வெளியே கொண்டு வரவேண்டும். உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை நாம் காண வேண்டும். ஏற்றுமதி, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப், சுற்றுலா என அனைத்திலும் இந்தியா முன்னேற முடியும் என்று அவர் கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் கால்தடத்தை பதிக்கும் தன் விருப்பத்தையும் லட்சியத்தையும் வெளிப்படுத்தினார். ஜெய் கிசான் (விவசாயிகள்), ஜெய் ஜவான்(வீரர்கள்), ஜெய் விஜியன் (அறிவியல்) மற்றும் இப்போது ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) என பல வளர்ச்சிக்குமான விசயஙகளை எடுத்துக் கூறினார். இந்தியாவை ஐந்து டிரில்லியன் டால பொருளாதாரமாக மாற்றுவதற்கான எங்கள் கூட்டு முயற்சியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டும். உள்கட்டமைப்பில் ரூ .100 லட்சம் கோடி முதலீடு தேவையாக இருக்கும்.  ஆனால் இதுபோன்ற பார்வையுடன் நாம் முன்னேற வேண்டும் . திறன் மேம்பாட்டு அளவை நாம் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

நீர் பாதுகாப்பு மற்றும் நீர் கிடைப்பதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். “எங்கள் குறிக்கோள் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை சென்று சேர்க்க வேண்டும். அதனால்தான் நாங்கள் ஜல சக்தி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார். 

ஜூலை 5 பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் பிரதமரின் உரை மிகவும் கவனத்திற்குரியது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் முன்னோட்டமாக பிரதமரின் உரை இருக்கிறது

.