This Article is From Dec 03, 2019

“GST வரியில ஏன் இவ்ளோ குழப்பம்..?”- தயாநிதியின் நெத்தியடி கேள்வி; நிர்மலாவின் பதிலடி!

ஜிஎஸ்ட் வரி விதிப்பில் நிலவி வரும் ஒரு சிக்கல் பற்றி மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார். 

“GST வரியில ஏன் இவ்ளோ குழப்பம்..?”- தயாநிதியின் நெத்தியடி கேள்வி; நிர்மலாவின் பதிலடி!

"பெர்டோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதில் எந்தவித தெளிவும் இல்லை. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்"

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் திமுக எம்.பி-க்கள். இந்நிலையில், ஜிஎஸ்ட் வரி விதிப்பில் நிலவி வரும் ஒரு சிக்கல் பற்றி மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார். 

“ஜிஎஸ்டி வரியை முதன்முறையாக அமல்படுத்தும் போது மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு நாடு ஒரு வரி என்ற கோஷத்தை முன் வைத்தனர். இதன் மூலம் வரிச் சுமை குறைக்கப்பட்டு, வரி வசூல் சுலபமாக நடக்கும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையிலான ஜிஎஸ்டி வரி முறை பின்பற்றப்படுகிறது. 

5tbobif

குறிப்பாக பெர்டோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதில் எந்தவித தெளிவும் இல்லை. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று லோக்சபாவில் கேள்வியெழுப்பினார் தயாநிதி மாறன். 

அதற்கு மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி வரி மூலம் ஒரு நாடு ஒரு வரி என்று சொன்னது உண்மைதான். பெட்ரோலிய பொருட்களைப் பொறுத்தவரை, அதற்கு ஒரு வகையிலான வரி விதிக்கப்பட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தியுள்ளோம். ஆனால், அது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில்தான். ஜிஎஸ்டி கவுன்சில் இது குறித்து விரைவாக முடிவெடுக்கும் பட்சத்தில், ஒரு வரியே நாடு முழுவதும் வசூலிக்கப்படும்,” என்று பதில் அளித்தார். 

.