குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
மத்திய பிரதேசம் புர்ஹான்பூரின் பிரோடா கிராமத்தில் தலித் மணமகனை கோவிலுக்குள் நுழைவதை தடுத்துள்ளனர். துணை பிரிவு மாஜிஸ்திரேட் காஹிராம் படோல் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தலித் குடும்பத்தை கோவிலுக்குள் நுழைய சிலர் அனுமதிக்கவில்லை என்று கலெக்டருக்கு புகார் வந்தது. குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று காஷிராம் படோல் தெரிவித்தார்.
மணமகன் சந்தீப் கவாலே கோவிலில் திருமணம் செய்வதற்கு முன் ஒப்புதல் வாங்கியதாக கூறினார். ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் கோயிலை பூட்டியுள்ளனர். “கிராமத்தில் உள்ள பலர் கோயிலுக்குள் நுழைவதற்கு எங்களை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், கோவிலில் திருமணத்தை ஏற்பாடு செய்வதற்கு முன் ஆட்சியரிடம் அனுமதி கேட்டோம்” என்று சந்தீப் காவலே கூறினார்.
கோயில் அறங்காவலர்கள் பேரில் வாயில்கள் பூட்டப்பட்டதாக மணமகன் குற்றம் சாட்டினார். இதனிடையே தலித் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.