This Article is From Jun 26, 2020

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்! துணை ராணுவ வீரர், 6 வயது சிறுவர் உயிரிழப்பு

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை  தொடர்ந்து,  பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை தேடுதல்  வேட்டை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக என்கவுன்ட்டர் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல்
  • கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் துணை ராணுவ வீரர் பலி
  • காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுவன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்
Srinagar:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் துணை ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 6 வயது சிறுவர் ஆகியோர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா என்ற இடத்தில் துணை ராணுவமான ரிசர்வ் போலீஸ் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.  இதில்  காயம் அடைந்த  ரிசர்வ் போலீஸ் வீரர் ஒருவர் பிஜ்பெஹாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில், 'மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை செய்தவர்கள் யார் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளோம்.  அவர் ஜம்மு காஷ்மீர்  மாநில  ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்.  துப்பாக்கியால் அவர் சுட்டதில் ரிசர்வ் போலீஸ் வீரர் மற்றும் 6 வயது சிறுவர் ஆகியோர் உயிரிழந்தனர்' என்று தெரிவித்தார்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடந்திருக்கும் தாக்குதல்  தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், 'ஒன்றும் அறியா அப்பாவி 6 வயது சிறுவர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.

முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு  படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிரால் பகுதியின் செவா உலார் என்ற  இடத்தில் இந்த  சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 21 வினாடி ஓடக்கூடிய வீடியோவை ஏ.என்.ஐ.  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை  தொடர்ந்து,  பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை தேடுதல்  வேட்டை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக என்கவுன்ட்டர் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

.