தெலங்கானா : 119-ல் 73 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன

எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்திக்கும் பிரமாண பத்திரங்களின் தகவல்படி 73 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்திருக்கிறது.

தெலங்கானா : 119-ல் 73 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன

தெலங்கானா சட்டசபையின் அமைப்பு

Hyderabad:

தெலங்கானா சட்டசபையில் மொத்தம் உள்ள 119 எம்எல்ஏக்களில் 73 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தாக்கல் செய்திருக்கும் தேர்தல் பிரமாண பத்திரங்கள் மூலம் இந்த தகவல் வெளிவந்துள்ளன.

இவர்களில் 47 எம்எல்ஏக்கள் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை பதிவாகி இருக்கின்றன. ஒட்டுமொத்த அளவில் பார்க்கும்போது 61 சதவீத எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் புகார்கள் உள்ளன.

இந்த சதவீதம் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது 67 சதவீதமாக இருந்தது. 2014-ல் தெலங்கானா எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 7.70 கோடி ரூபாயாக இருந்தது.

முஸ்லிம் எம்எல்ஏக்களை பொறுத்தவரையில் கடந்த தேர்தலின்போது மொத்தம் 8 பேர் இருந்தனர். அந்த எண்ணிக்கை இந்த தேர்தலில் மாறவில்லை. அசாசுதீன் உவைசியின் மஜ்லிஸ் கட்சியில் இருந்து 7 எம்எல்ஏக்களும், டி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து ஒரு முஸ்லிமும் எம்எல்ஏக்களாக தேர்வாகி உள்ளனர்.

பெண் உறுப்பினர்களை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் 9 பேர் இருந்தனர். அந்த எண்ணிக்கை இந்த தேர்தலில் 6-ஆக குறைந்திருக்கிறது.