This Article is From Apr 02, 2020

பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இளம் வயதில் பலியான குழந்தை இதுவாகத்தான் இருக்க முடியும் என்று ஆளுநர் நெட் லாமொண்ட் தெரிவித்துள்ளார்.

பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

அந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. (Representational)

ஹைலைட்ஸ்

  • பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!
  • சோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
  • கனெக்டிகட் மாகாண ஆளுநர் லாமொண்ட் உருக்கம்
New York:

கொரோனா பாதிப்பு காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண ஆளுநர் லாமொண்ட் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆளுநர் நெட் லாமொண்ட் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கடந்த வாரம் மருத்துவமனைக்கு புதிதாக பிறந்த அந்த குழந்தையை மோசமான நிலைமையில் கொண்டுவந்ததால் மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. 

தொடர்ந்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 

அந்த குழந்தை இறந்த செய்தி என் மனதை சுக்குநூறாக உடைப்பதாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இளம் வயதில் பலியான குழந்தை இதுவாகத்தான் இருக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தையின் மரணம் குறித்து இல்லினாய்ஸ் அதிகாரிகள் விசாரிப்பதாக கூறியிருந்தனர். தொடர்ந்து, அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

மேலும், உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, 9 மாதமே ஆன குழந்தை என்பதும் தெரியவந்தது. 

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கனெக்டிகட் எல்லையில் அமைந்துள்ள நியூயார்க் மாகாணத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த அமெரிக்க உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 2,000 பேர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

அமெரிக்காவின் நியூயார்க், கனெக்டிகட் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மில்லியன கணக்கான அமெரிக்கர்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த 3 பகுதிகளில் மட்டும் 100,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரஸால் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை, பச்சிளம் குழந்தைக்கு கூட இந்த வைரஸ் இரக்கம் காட்டவில்லை என்று கனெக்டிகட் ஆளுநர் நெட் லாமென்ட், உருக்கமாக கூறியுள்ளார். 

மேலும், இது வீட்டிலேயே இருப்பதன் முக்கியத்துவத்தையும், மற்ற நபர்களுக்கு வெளிப்படாமல் கட்டுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அதைச்சார்ந்தே உங்களின் வாழ்க்கையும், மற்றவர்களின் வாழ்க்கையும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

.