This Article is From Oct 10, 2018

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்!

டெல்லியில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகளும் கத்தியால் குத்தப்பட்டு மர்மமாக மரணமடைந்துள்ளனர். அவர்களது 19வயது மகன் லேசான காயங்களுடன் மீட்கப் பட்டார்.

தெற்கு டெல்லியின் வசந்த் குஞ் பகுதியில் மூன்று கொலை நடந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • புதனன்று டெல்லியின் வசந்த் குஞ் பகுதியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்
  • தம்பதி மற்றும் அவர்களது மகளின் உடல்கள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள
  • தம்பதியினரின் மகன் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார்
New Delhi:

தெற்கு டெல்லியின் வசந்த் குஞ் பகுதியில் வசித்து வந்த, 40 வயது மதிக்கத்தக்க மித்திலேஷ் மற்றும் சியா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் நேகா என்ற மகள் மற்றும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். புதனன்று காலை 5 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் பெற்றோர் மற்றும் மகள் உயிரிழந்தனர். மகன் இலேசான காயங்களுடன் இருந்த நிலையில், இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் நபர் அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார்.

இதுகுறித்து சியாவின் சகோதரர் கூறுகையில், தனது சகோதரியின் கணவர் மித்திலேஷ் உத்திரபிரதேஷத்தைச் சேர்ந்தவர். அவர் டெல்லியில் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்தார். அவரது மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கடத்தப்பட்டதாக கூறினார்.

மித்திலேஷ், சியா மற்றும் அவர்களது மகள் இறந்த நிலையில் மருத்துவமனக்கு கொண்டு வரப்பட்டார்கள். இலேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்களது மகன் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாக துணை ஆணையாளர்பெனிட்டா மேரி ஜெய்கர் தெரிவித்தார்.

டெல்லி போலீசார் அப்பகுதியிலிருக்கும் சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்து வருகின்றனர்.

.