This Article is From Apr 02, 2020

நோயாளியின் போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கும் பரவிய கொரோனா!

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளியை கவனித்து வந்த செவிலியருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என மருத்துவர் ஜஸ்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.

நோயாளியின் போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கும் பரவிய கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,965ஆக அதிகரிப்பு (File)

ஹைலைட்ஸ்

  • நோயாளியின் போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கும் பரவிய கொரோனா
  • எனினும், அது மட்டுமே பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது என தகவல்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,965ஆக அதிகரிப்பு
Panchkula:

கொரோனா பாதிக்கப்பட்டவரின் போனை பயன்படுத்தியதால், பஞ்ச்குலா மருத்துவமனையை சேர்ந்த செவிலியருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பஞ்ச்குலா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜஸ்ஜீத் கவுர் கூறும்போது, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளியை கவனித்து வந்த செவிலியருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் போனை அவர் பயன்படுத்தியுள்ளார். எனினும், அது மட்டுமே பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது. என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, அந்த மருத்துவமனையில், கொரோனா பாதித்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவத்துள்ளது. இந்த தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடுமுழுவதும், 1,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

.