This Article is From Apr 01, 2020

“துயர்மிகு 2 வாரங்கள்… 2 லட்சம் உயிர்களுக்கு ஆபத்து…”- எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்!

Donald Trump: கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகைத் தரப்பு அதிர்ச்சித் தகவல் கொடுக்கிறது. 

“துயர்மிகு 2 வாரங்கள்… 2 லட்சம் உயிர்களுக்கு ஆபத்து…”- எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்!

Donald Trump: "அடுத்து வரவுள்ள கடுமையான நாட்களுக்கு அமெரிக்க குடிமக்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் 1 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
  • அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது
  • வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிபர் டிரம்ப்
Washington:

Donald Trump: கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் தத்தளித்து வருகிறது அமெரிக்கா. நாளுக்கு நாள் அங்கு வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் னொனால்டு டிரம்ப், நாட்டு மக்களுக்குப் பல எச்சரிக்கைகளை விடுத்தார். 

“அடுத்து வரவுள்ள 2 வாரங்கள் அமெரிக்காவுக்கு மிக மிக துயர்மிகு காலமாக இருக்கும். கொரோனா வைரஸ், அமெரிக்காவைப் பிடித்து உலுக்கும் பிளேக் நோய் போல.

அடுத்து வரவுள்ள கடுமையான நாட்களுக்கு அமெரிக்க குடிமக்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று தன் உரையின் போது சொன்னார் அதிபர் டிரம்ப். 

கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகைத் தரப்பு அதிர்ச்சித் தகவல் கொடுக்கிறது. 

அமெரிக்கப் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அப்படிச் செய்வதுதான் ஒரே வழி என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் நிர்வாகக் குழுவில் உள்ள டெபோரா பிர்க்ஸ், “இந்த வைரஸ் தொற்றை எதிர்கொள்ள மாயாஜால மருந்தோ, தெரபியோ இல்லை. நாம் அடுத்து வரும் 30 நாட்களில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் இந்த வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து தப்பிப்பது சாத்தியமாகும்,” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 

தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வேலை செய்வதாகவும், அதனால் வைரஸ் தொற்று மற்றும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

.