நாடு முழுவதும் ஒரே நாளில் 28,000ஐ கடந்த கொரோனா! மொத்த பாதிப்பு 8.49 லட்சமாக அதிகரிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 551 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 8,49,553 ஆக அதிகரித்துள்ளது
  • 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 22,674 பேர் உயிரிழந்துள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8,49,553 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,34,621 பேர் குணமடைந்துள்ளனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர்.