This Article is From Apr 21, 2020

கொரோனா தடுப்புக்காக மாஸ்க் தயாரிக்கும் 98 வயது பாட்டி! முதல்வர் பாராட்டு

98 வயதாகும் குருதேவ் கவுர் தலிவாலுக்கு ஒரு கண்ணில் பார்வை தெரியாது. அதிகாலையில் தினமும் எழுந்திருக்கும் அவர், காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மாஸ்க் தயாரிக்கும் பணியை செய்கிறார்.

கொரோனா தடுப்புக்காக மாஸ்க் தயாரிக்கும் 98 வயது பாட்டி! முதல்வர் பாராட்டு

தன்னலமற்ற அர்ப்பணிப்பு என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பஞ்சாபில் 98 வயதான மூதாட்டி மாஸ்க் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்
  • மூதாட்டியை மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்
  • பஞ்சாபில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது
Chandigarh:

தள்ளாடும் 98 வயதிலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாஸ்க் தயாரிக்கும் பணியில் பஞ்சாபை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஈடுபட்டு வருகிறார். அவரை அம்மாநில முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறியுள்ளனர். பாட்டியின் சேவை, கொரோனா தடுப்ப பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. 

பஞ்சாப் முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனாவுக்கு எதிரான போரில் பஞ்சாப் மாநிலத்தின் மிக வலிமையான போராளிதான் இந்த 98 வயதாகும் குருதேவ் கவுர். பஞ்சாபின் மோகாவில் மூதாட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரைப் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை, பஞ்சாப் மாநிலத்தவர் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை நிரூபிக்கிறது. என்ன துயரம் வந்தாலும் நாம் கொரோனாவை வெல்வோம்' என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க...
 

மூதாட்டி குருதேவ் கவுர் தலிவாலுக்கு ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. அதிகாலையில் எழுந்திருக்கும் அவர், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். 

யாருடைய உதவியும் இல்லாமல், தையல் மிஷினைப் பயன்படுத்தி அவர் மாஸ்க் தயாரிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கா 98 வயது என பலரும் ஆச்சர்யத்துடன் கமென்ட் செய்துள்ளனர்.


பொதுமக்கள் மாஸ்க் அணிவதை பஞ்சாப் அரசு கட்டாயமாக்கியுள்ளது. இங்கு 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

.