This Article is From Mar 02, 2020

60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா; 3000-த்தை தாண்டும் பலி எண்ணிக்கை!

சீனாவில் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஹூபேய்க்கு வெளியில் புதிதாக 6 பேருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா; 3000-த்தை தாண்டும் பலி எண்ணிக்கை!

கொரோனா தற்றோது 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
  • 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது கொரோனா
  • சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,912ஆக உயர்ந்துள்ளது.
Beijing, China:

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000-த்தை தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாகச் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,912ஆக உயர்ந்துள்ளது. இதில், புதிய உயிரிழப்புகள் அனைத்தும் கொரோனா வைரஸ் உருவான மையப் பகுதியான ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவை எனத் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

சீனாவில் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஹூபேய்க்கு வெளியில் புதிதாக 6 பேருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீனாவின் மையப்பகுதியான ஹூபேயில் கடந்த வருடம் உருவான வைரஸ் தொற்று, தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்த வார இறுதியில் தங்கள் நாடுகளில் ஏற்பட்ட முதல் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தன. 

ஐரோப்பாவின் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் கடந்த 48 மணி நேரத்தில் நோய்த்தொற்றுகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தன.

இந்த வைரஸ் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும், ஏற்கனவே மற்ற நோய்களால் பலவீனமடைந்துள்ளவர்களையும் தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவிக்கிறார்கள், அதே நேரத்தில் 14 சதவிகிதத்தினர் நிமோனியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஐந்து சதவிகிதம் பேர் மோசமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

.