This Article is From May 09, 2020

மகாராஷ்டிராவில் 19,000ஐ கடந்தது கொரோனா தொற்று! பாதுகாப்பாக இருக்குமாறு உத்தவ் எச்சரிக்கை!!

மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியவில்லை என்றும் முமு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என்றும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் 19,000ஐ நடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை

Mumbai:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 56 ஆயிரத்தைக் கடந்திருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மாகாராஷ்டிரா முதலில் உள்ளது. இம்மாநிலத்தில் கிட்டதட்ட 19 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 1,089 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது தேசிய அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாகும்.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, “மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியவில்லை என்றும் முமு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என்றும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மும்பைக்கு ராணுவம் வரவழைக்கப்படுவது குறித்த வதந்திகளை தாக்ரே மறுத்துள்ளார். மேலும், தேவைப்படுமாயின் மத்திய அரசிடமிருந்து கூடுதல் மனித வளங்களை (additional manpower) பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் மூலமாக காவல்துறையினருக்குச் சற்று ஓய்வு அளிக்கப்படுவதற்கான வாய்ப்பு  இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக மத்திய அரசிடமிருந்து உதவிக்கு மனித வளத்தினை பெறுவது என்பது, மும்பையை ராணுவத்திடம் ஒப்படைத்துவிடுவது என்பதல்ல. மாறாக இதன் மூலமாக ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் காவல்துறையினருக்குச் சற்று ஓய்வு ஏற்படுத்துவது என்பதற்குத்தான்.  காவல்துறையினர் சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் தாக்ரே கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கை மே 17க்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு, மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை எந்த அளவு பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், நாம் இன்று அல்லது நாளை என என்றாவது ஒருநாள் இந்த முழு முடக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேற வேண்டும். நாம் தற்போதைய நிலையிலேயே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது. ஆனால், இதிலிருந்து வெளிவருவதற்கு மக்கள் சுகாதார ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தனி மனித இடைவெளி மற்றும் முககவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் சடலங்களுக்கு நடுவே சிகிச்சையாக்கப்பட்டது சமீபத்தில் இம்மாநிலத்தில் பேசு பொருளாக மாறியது. இதை குறிப்பிட்ட தாக்ரே, இது போன்று மருத்துவமனையின் பொறுப்பற்ற தன்மையை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

மும்பை நகரத்தின் தொற்று தடுப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரவீன் பர்தேஷிக்கு பதிலாக இக்பால் சாஹால் மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா குறிப்பிட்ட அக்கறை கொண்ட பகுதி என்றும், இம்மாநிலத்திற்கு உதவ தயாராக உள்ளோம் என்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

.