
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஹைலைட்ஸ்
- கொரோனா எதிர்ப்பு மருந்தை வங்கதேசத்திலிருந்து வரவழைக்கிறது மகாராஷ்டிரா
- சோதனை அடிப்படையில் பயன்படுத்திப் பார்க்க மகாராஷ்டிரா திட்டம்
- நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது
கொரோனா பாதிப்புக்குள்ளோரை ஓரளவு மீட்டு கொண்டு வரும் என நம்பப்படும் ரெம்டெசிவிர் என்ற எதிர்ப்பு மருந்தை, நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிர அரசு வங்க தேசத்திடமிருந்து பெறவுள்ளது. இந்த மருந்துகள் முதலில் சோதனை அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது.
இந்த மருந்தை மகாராஷ்டிராவுக்கு கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்களை நீக்கித் தருமாறு, மருத்துவ குழுவினர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ரெம்டெசிவிர் மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகள் தயாரிக்க முடியும். இருப்பினும் அவற்றுடன் ஏற்கனவே அமெரிக்க நிறுவனமான கிலீட் சைன்சஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனம் இன்னமும், ரெம்டெசிவிரை உற்பத்தி செய்யவில்லை. ஏனென்றால் அதற்கான அனுமதி இன்னும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை.
ரெம்டெசிவிர் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று 18 மருத்துவ கல்லூரிகள் உறுதி செய்திருக்கின்றன. இந்த மருந்து வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை பெறும் முயற்சியில் பல நாட்டு அரசுகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் மகாராஷ்டிரா 3 ஆயிரம் எண்ணிக்கையில் ரெம்டெசிவிரை பெறவுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர் மேலும் 10 ஆயிரம் மருந்து குப்பிகளை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
From the beginning of I consistently urged to DCGI and Central Health Ministry to give permission for Remedesivir Drug
— Dr.Jitendra Awhad (@Awhadspeaks) June 12, 2020
Y r u still holding on to permissions
People are dying and this is as of now the best drug
Plz save lives @drharshvardhan ji@drvgsomani ji pic.twitter.com/nT9wxQeLuv
இதுதொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கூறுகையில், 'நான் ஆரம்பம் முதலே ரெம்டெசிவிர் மருந்தை சோதித்து பாருங்கள் என்று மத்திய அரசையும், சுகாதார அமைச்சகத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதற்கு ஏன் அனுமதி அளிக்கப்படவில்லை என்றுதான் தெரியவில்லை. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா எதிர்ப்பு மருந்துகளில் ரெம்டெசிவிர்தான் சிறந்ததாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 3.7 ஆக நேற்று அதிகரித்திருக்கிறது. 2 நாட்களில் மட்டும் மும்பயில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்ச ராஜேஷ் டோப் கடந்தவாரம் கூறுகையில், 'ரெம்டெசிவிர் மருந்து 10 ஆயிரம் குப்பிகளை நாங்கள் வாங்கவுள்ளோம். பல ஆய்வகங்களின் ஆய்வு முடிவில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளில் இதுதான் சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் ஏற்படும் மெர்ஸ், சார்ஸ் வைரஸ்களை இந்த மருந்து கடுமையாக எதிர்க்கிறது
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலில், ரெம்டெசிவிர் கொரோனாவை ஒழிக்க நமக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக விலைகொண்ட இந்த மருந்துகள் ஏழை எளிய, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா பாதிப்பு உடையோருக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்தை, கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கொடுக்கலாம் என்று சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் கழகம் பரிந்துரை செய்துள்ளது.