This Article is From Apr 08, 2020

விற்பனைக்கு வந்த ‘கொரோனா ஸ்வீட்’ - இதன் பின்னால் உள்ள காரணம் என்ன?

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த ‘கொரோனா சந்தேஷ்’ ஸ்வீட்டை இலவசமாக கொடுக்க உள்ளதாக இந்துஸ்தான் ஸ்வீட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விற்பனைக்கு வந்த ‘கொரோனா ஸ்வீட்’ - இதன் பின்னால் உள்ள காரணம் என்ன?

ஸ்வீட்டுடன் கொரோனா வைரஸிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது மற்றும் விழிப்புணர்வு கோஷங்கள் அடங்கிய நோட்டீஸையும் தருகிறது இந்துஸ்தான் ஸ்வீட்ஸ்.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இனிப்பு வகை தயாரிப்பாளரான இந்துஸ்தான் ஸ்வீட்ஸ், விஷேச கொரோனா வைரஸ் வடிவிலான ‘சந்தேஷ்' வகை ஸ்வீட்டைத் தயாரித்துள்ளது. 

தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த ‘கொரோனா சந்தேஷ்' ஸ்வீட்டை இலவசமாக கொடுக்க உள்ளதாக இந்துஸ்தான் ஸ்வீட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்வீட்டுடன் கொரோனா வைரஸிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது மற்றும் விழிப்புணர்வு கோஷங்கள் அடங்கிய நோட்டீஸையும் தருகிறது இந்துஸ்தான் ஸ்வீட்ஸ்.

நோட்டீஸில், “கொரோனா வைரஸை நாம் வெற்றி கொள்வோம்!” என்று எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து கடையின் உரிமையாளர் ரபின் பால், “இந்த விசேஷ வகை ஸ்வீட்டுகளை லாபத்துக்காக நாங்கள் செய்யவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வரவும், நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நோக்கிலும் இதைச் செய்கிறோம்” என்று விளக்குகிறார். 

தற்போது கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு காலம் என்பதால், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இனிப்பு வகைக் கடைகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.