This Article is From Jul 08, 2020

அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு! ஜார்க்கண்ட் முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டார்

பாதிக்கப்பட்ட அமைச்சரும், எம் எல்ஏவும், ராஞ்சியில்  உள்ள ராஜேந்திரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த ஆய்வு நடந்து  வருகிறது. 

அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு! ஜார்க்கண்ட் முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டார்

ஜார்க்கண்டில் 3,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Hemant Soren tweeted he is isolating himself as a safety measure
  • Two of his colleagues tested positive for highly infectious coronavirus
  • Mr Soren's samples are expected to be tested today
New Delhi:

அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜார்க்கண்டில்  முதல்வர் ஹேமந்த் சோரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ஜார்க்கண்டில் அமைச்சர் மிதிலேஷ் தாகூர்  மற்றும் எம்எல்ஏ மதுரா மாதோ ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

இந்த நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருப்பினும் மிக முக்கிய அலுவல்களை  மட்டும் அவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'சமூக விலகலை  கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், மாஸ்க் இல்லாதவர்கள் துணியால் முகத்தை மூடியிருக்க வேண்டும்' என்று ஜார்க்கண்ட் மக்களை முதல்வர் ஹேமந்த் சோரன் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

பாதிக்கப்பட்ட அமைச்சரும், எம் எல்ஏவும், ராஞ்சியில்  உள்ள ராஜேந்திரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த ஆய்வு நடந்து  வருகிறது. 

ஜார்க்கண்டில் 3,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.  அதில் பங்கேற்றவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் நிதிஷ் குமார் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லையென தெரியவந்தது. 

.