This Article is From Apr 27, 2020

பிரதமருடன் கலந்துரையாடலை தவிர்க்கும் பினராயி, பங்கேற்கும் மம்தா ஆனால்…

இன்றைய கலந்துரையாடலில் கேரள முதல்வர் விஜயன் பெயர் இடம்பெறாத நிலையில் மாநிலத் தலைமைச் செயலாளர் பங்கேற்பார்

பிரதமருடன் கலந்துரையாடலை தவிர்க்கும் பினராயி, பங்கேற்கும் மம்தா ஆனால்…
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27,892 ஆக அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதில் தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை நீட்டிப்பது குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரதமரின் கலந்தாலோசனை பட்டியில் கேரள மாநில மாநில முதல்வர் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாகப் பிரதமரின் காணொளி காட்சி மூலமான கலந்துரையாடலில் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற கலந்துரையாடல்களில் மாநிலத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத் தலைமைச் செயலாளர் டோம் ஜோஸ் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.

நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில கோரிக்கைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அம்மாநில கோரிக்கைகள் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளன.

இன்றைய கலந்துரையாடலில் கேரள முதல்வர் விஜயன் பெயர் இடம்பெறாத நிலையில் மாநிலத் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என மாநில அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில் மேற்குறிப்பிட்ட செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கலந்துரையாடலில் பங்கேற்க மாட்டார் என கணித்திருந்த நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடலில் பங்கெடுத்தபின் மாநிலத் தலைமைச் செயலாளரை தனக்குப் பதில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய மாநிலங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பினை மத்திய அரசு வழங்காததற்கு வருத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கை மீண்டும் நீட்டிக்கப்படுமானால் அது குறித்து பெரிய மாநிலங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பானர்ஜி பேசுவதற்கு இடமளிக்கவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது அவர் தனது கருத்தினை பதிவு செய்வார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இரண்டாவது முறையாக ஏப்ரல் 15ம் தேதி நீட்டிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது மே 3ம் தேதியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.