This Article is From Apr 19, 2020

இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தப்பட்ட முகாமை ராணுவம் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளது!

தொடக்கத்தில் வெளி நாடுகளிலிருந்து வந்த 250 பேர் முதலில் இங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் டெல்லியில் மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுத்த 1,000 பேர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

நரேலா தனிமைப்படுத்தப்பட்ட வசதி டெல்லி அரசால் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15,000 கடந்திருக்கக்கூடிய நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இராணுவ மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்கள் அடங்கிய குழு டெல்லியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தினை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஆறு ராணுவ மருத்துவ அதிகாரிகள் மற்றும் 18 துணை மருத்துவர்களை உள்ளடக்கிய 40 பேர் கொண்ட குழுவானது, வடமேற்கு டெல்லியின் நரேலாவில் உள்ள ஓர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமினை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நிர்வகிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு தனிமைபப்படுத்தப்பட்டடுள்ள 932 பேர் கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்வோடு தொடர்புள்ளவர்களாவார்கள். இதில் 367 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

kuuv789o

டெல்லியின் நரேலாவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் ஒன்றாகும்.

கடந்த மாதம் உருவாக்கப்பட்ட இந்த தனிமைப்படுத்தல் முகாமை நிர்வகிக்க டெல்லி அரசுக்கு ராணுவம் உதவிவருகிறது. ஆறு ராணுவ மருத்துவ அதிகாரிகள் மற்றும் 18 துணை மருத்துவர்களை உள்ளடக்கிய 40 பேர் கொண்ட குழுவானது 12 மணிநேரம் இந்த முகாமினை நிர்வகிப்பதினால் மாநில மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்குப் பெரிய அளவில் நிவாரணமாக உள்ளது.

தொடக்கத்தில் வெளி நாடுகளிலிருந்து வந்த 250 பேர் முதலில் இங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் டெல்லியில் மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுத்த 1,000 பேர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இராணுவ மருத்துவக் குழுவின் அணுகுமுறையானது உடனிருக்கும் நோயாளிகளிகளை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவத்திற்கு முழு ஒத்துழைப்பினை கொடுப்பதாகவும் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. 

நமது குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் முயற்சிகளுக்கு முழு மனதுடன் பங்களிப்பு செய்வதற்கான உறுதியுடனும் இராணுவம் தொடர்ந்து போராடும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 15,000க்கும் அதிகமானவர்களில் ஏறத்தாழ 4,000 பேர் டெல்லி மதம் சார்ந்த நிகழ்ச்சியுடன் தொடர்பிலிருந்தவர்கள் என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. தற்போது வரை 500க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.