This Article is From Jul 07, 2020

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவை விட இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம்!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 271ஆக மூன்றாவது இடத்தில் இருந்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவை விட இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம்!

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவை விட இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம்! (Representational)

New Delhi:

இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்தது. உலகளவில் பிரேசில் நாட்டில் மட்டுமே 602 பேர் இந்தியாவை விட அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 271ஆக மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 19,693 பேர் உயிரிழந்துள்ளனர். இது பிரேசிலில், 64,867ஆகவும், அமெரிக்காவில் 1,29,947ஆகவும் உள்ளது. 

இந்தியாவில் இறப்பு விகிதமானது 2.8 சதவீதமாக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 3 சதவீதமாகவும், இரண்டு வராங்களுக்கு முன்பு 3.2 சதவீதமாகவும் இருந்தது. 

உலகளவில் உயிரிழப்பு விகிதம் 4.7 சதவீதமாக உள்ளது. ஒப்பிடுகையில் அமெரிக்காவில் இறப்பு விகிதம் 4.5 சதவீதமாகவும், பிரேசில் 4.1 சதவீதமாகவும் உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா உள்ளது. 

இந்தியாவின் குறைந்த இறப்பு விகிதம் ஒருபுறம் இருந்தாலும், கடந்த சில வாரங்களில் புதிதாக அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையால் கவலை ஏற்பட்டுள்ளது, இது ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக அரசு தளர்த்தி வரும் நிலையில், அதிகரித்து வருகிறது. 

நேற்று மாலையில் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் ஏழு லட்சத்தை தாண்டியது, 3,827 புதிய பாதிப்புகள் நாட்டின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 7,01,240 ஆக உயர்த்தியது. 

ஜூலை 3ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 20,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, கடந்த இரண்டு நாட்களில் ஒவ்வொன்றிலும் 24,000க்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,822 பேர் உயிரிழந்தது உட்பட இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, 1,510 உயிரிழப்புகள் உட்பட 1,11 லட்சம் பேர் பாதிப்புடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, தேசிய தலைநகர் 3,115 உயிரிழப்புகள் உட்பட 1.01 லட்சம் பேர் பாதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 

.