This Article is From Aug 03, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது; 38,135 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,03,695 ஆக உள்ளது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையானது 1.75 கோடியாக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது; 38,135 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது; 38,135 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 52,972 ஆக பதிவானதை தொடர்ந்து, 17 லட்சத்தில் இருந்து, பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 11 லட்சத்தை தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,03,695 ஆக உள்ளது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையானது 1.75 கோடியாக உயர்ந்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, 3வது நாடாக இந்தியா உள்ளது. 

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளது. 

முதல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் பதிவான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை அடைவதற்கு 186 நாட்கள் எடுத்துள்ளது. 110 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அடைந்தது. ஜூலை மாதத்தில் மட்டும், 60 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கையும், 50 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது. 

டெல்லி அருகே உள்ள குருகிராமில் மேதாந்தா மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். இதுதொடர்பாக நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தான் நலமுடன் இருப்பதாகவும், எனினும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, முதல்வரின் செய்திதொடர்பு குழு கூறும்போது, மானிப்பால் மருத்துவமனையில் எடியூரப்பாவை அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை காவிரி மருத்துவமைனையில அனுமதிக்கப்பட்டார். அவர் அறிகுறிகள் இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பாதிப்புக்குள்ளான மகராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,49,214 ஆக உள்ளது. 15,316 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 4,31,719 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பாதிப்பு அதிகமுள்ள டெல்லியை பின்னுக்கு தள்ளி, ஆந்திர பிரதேசம் 3வது இடத்தில் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,933 ஆக உள்ளது. 

.